டி20 உலக கோப்பைக்கான ஒத்திகை போட்டி.. ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இந்தியா..!

இன்றிரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொகாலியில் போட்டி நடைபெறுகிறது..!

டி20 உலக கோப்பைக்கான ஒத்திகை போட்டி.. ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இந்தியா..!

ஆஸ்திரேலியா-இந்தியா:

மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில், விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்குகிறது. 

ஒத்திகை போட்டி:

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இதில் களம் காண்கிறது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு ஒத்திகையாக அமைந்துள்ள இந்த தொடர், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

7.30மணிக்கு துவக்கம்: 

ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது பந்துவீச்சு பலத்தை அதிகரித்துள்ளது. நீண்ட 
இடைவெளிக்குப் பிறகு சதம் விளாசிய கோலி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு எதிராகவும் ரன் குவிப்பை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.