ஐபிஎல் 2023: நேற்றைய ஆட்டத்தில் மாஸ் காட்டிய பஞ்சாப், லக்னோ அணிகள்...!

ஐபிஎல் 2023: நேற்றைய ஆட்டத்தில் மாஸ் காட்டிய பஞ்சாப், லக்னோ அணிகள்...!

குஜராத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியை பஞ்சாப் அணியும், டெல்லி அணியை லக்னோ அணியும் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளன. 

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த முதலாவது ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி பனுகா ராஜபக்சேவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை தொடா்ந்து பெய்த காரணத்தால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : பில்லு எங்க?... அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

தொடா்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் வீரா் மேயா்ஸ் அதிரடியில் மிரட்டி 38 பந்தில் 73 ரன்கள் குவித்தாா். முடிவில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.  லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.