பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி...

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ..பி.எல். லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி...

ஐ. பி.எல். கிரிக்கெட் தொடரின்  37-வது லீக் போட்டி சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத்  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். 5 ரன்கள் எடுத்திருந்த அகர்வாலையும் ஹோல்டர் வீழ்த்தினார். அடுத்து வந்த கெயில் மற்றும் மார்க்ரம் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் 14 ரன்கள் எடுத்த கெயில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானிடம் எல். பி.ட பிள்யூ. முறையில் அவுட் ஆனார். ஐதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் பஞ்சாப் வீரர்கள் யாராலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை.  இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப் பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஷமி பந்துவீச்சில் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் ஷமியின் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார்.  சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால், நிர்ணயித்த இலக்கை ஐதராபாத் அணியால் அடைய முடியவில்லை. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முன்னதாக அபுதா பியில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில், டெல்லி கே பிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதே சமயம் புள்ளி பட்டியலில் மீண்டும் டெல்லி கேப் பிட்டல்ஸ் முதலிடத்தை பிடித்தது.