ஐபிஎல் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகல் :  சென்னை அணிக்கு சிக்கல் !!

காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகல் :  சென்னை அணிக்கு சிக்கல் !!

கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

தற்போது வரை, சென்னை அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்து வருகிறது. இதனால் மீதமுள்ள போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. 

இந்நிலையில், சென்னை அணியின் நட்சத்திர வீரரான ஆர்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் . இது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த 8ம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. 

காயத்திலிருந்து ஜடேஜா இன்னும் மீளாததால் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது .