வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி.. இந்தியாவின் வெற்றிக்கு யார் காரணம்?

44 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அசத்திய சூர்யகுமார்..!

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி.. இந்தியாவின் வெற்றிக்கு யார் காரணம்?

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

73 ரன்களை குவித்த மேயர்ஸ்: பாசட்டரேவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழுப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேயர்ஸ், 73 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்தியா முன்னிலை: இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 19 ஓவர்களில் 165 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யகுமார், 44 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா 2-1 எனும் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி, வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.