ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் யார்? பெயர்களை பரிந்துரைத்த ஐசிசி!

ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு தென்னாப்பிரிக்க வீரர் மகாராஜ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி உள்ளிட்டோரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. 

ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் யார்? பெயர்களை பரிந்துரைத்த ஐசிசி!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஐ சி சி அறிவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயரை ஐ சி சி பரிந்துரைத்துள்ளது. வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்துவீச்சாளர்  கேசவ் மகாராஜ் மற்றும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சிமோன் ஹார்மர், ஓமன் வீரர் ஜதீந்தர் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நடாலி ஸ்கிவர் மற்றும் உகாண்டா ஆல்-ரவுண்டர் ஜேனட் எம்பாபா சி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒரு சிறந்த வீரர், வீராங்கனை ஐ. சி. சி. யின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ர சிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படவுள்ளனர்.