உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றால் ஐபிஎல் தொடரை விட அதிகம் பரிசு தொகை தரும் ஐசிசி...

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 11 கோடியே 71 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றால் ஐபிஎல் தொடரை விட அதிகம் பரிசு தொகை தரும் ஐசிசி...

 இந்தியா-நியூசிலாந்து இடையேயான ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 11 கோடியே 71 லட்சமும், தோல்வியடையும் அணிக்கு 5 கோடியே 86 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத தொகை ஐபிஎல் .தொடரில் வழங்கப்படும் பரிசுத் தொகையை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.