இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி..!

ஸ்மிருதி ராணியின் அதிரடி ஆட்டத்தால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்..!

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி..!

இந்தியா-இங்கிலாந்து:

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. ஹோவ் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து 227 ரன்கள் குவிப்பு:

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆலிஸ் டேவிட்சன் ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாசினார்.

அதிர்ச்சியளித்த தொடக்க வீரர்கள்:

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீராங்கனை சஃபாலி வர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

வெளுத்து வாங்கிய ஸ்மிருதி மந்தனா:

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - யாசிகா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 99ஆக உயர்ந்த நிலையில், 50 ரன்களுடன் யாசிகா ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்த ஹர்மன்பிரீத் கவுரும் ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதையும் படிங்க: மறைந்த இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை..!

232 ரன்கள் எடுத்து வெற்றி:

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம் விளாசி அசத்தினார். இறுதியில் இந்திய அணி, 44 புள்ளி 2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

சமன் செய்ய முயற்சி:

இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டி-20 தொடரில் கண்ட தோல்வியை ஒருநாள் போட்டியின் மூலம் சமன் செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்கியுள்ளது.