ஸ்ரீபத்பநாம கோயிலில் பாரம்பரிய உடையில் தரிசனம் செய்த தென்னாப்பிரிக்க வீரர்.. இங்கிருந்து போனவரு தானே?

இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது தென்னாப்பிரிக்கா..!

ஸ்ரீபத்பநாம கோயிலில் பாரம்பரிய உடையில் தரிசனம் செய்த தென்னாப்பிரிக்க வீரர்.. இங்கிருந்து போனவரு தானே?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கேரளாவில் இன்று முதல் 
நடைபெறவுள்ளது. இதற்காக கேரளாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அவ்வப்போது கேரளாவை சுற்றிப் பார்த்தும் வருகின்றனர். 

இது ஒரு புறம் இருக்க, இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும், கோயில்களிலும் கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல கோயில்களில் சிறப்பு ஏற்பாடாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவதுண்டு. 

அந்த வகையில், கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாப கோயிலில் நவராத்ரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் போட்டிக்காக முகாமிட்டுள்ள தென்னாப்பிரிக்க வீரர்களில், இந்தியாவில் பிறந்து வளர்ந்த கேசவ் மகாராஜா, பாரம்பரியமான வேஷ்டி அணிந்து பத்மநாப கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்தியாவை விட்டு அவர் வெளிநாடு சென்றிருந்தாலும், தாயகத்தை மறக்காது இருக்கிறார் என பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.