திரில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி... 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

திரில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி... 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது...

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள், 2 பிரிவுகளாக பிரிந்து பலப்பரீட்சை நடத்துகின்றன. ஓமனில் உள்ள அல் அமீரத் மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்றின் 2-வது லீக் ஆட்டத்தில், B பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 140 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்கள் விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர், சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வங்கதேச அணி பேட்ஸ்மென்கள் திணறினர். இறுதியில் வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது.