காத்திருக்கும் ஷாக்... தோனி, கோலியை பின்னுக்கு தள்ளி ரோஹித் படைக்க போகும் மெகா சாதனை?.. வியப்பில் சக வீரர்கள்!!

டி20 தொடரில் இதுவரை யாரும் படைக்காத சாதனையை ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா படைக்கவுள்ளார்.

காத்திருக்கும் ஷாக்... தோனி, கோலியை பின்னுக்கு தள்ளி ரோஹித் படைக்க போகும் மெகா சாதனை?.. வியப்பில் சக வீரர்கள்!!

இந்தியா-இலங்கை இடையிலான அணிகளுக்கு 2வது டி20 போட்டி இன்று தர்மசாலா மைதானத்தில் நடைபெறுகிறது.

3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில், இந்தியா ஏற்கனவே ஒரு தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று 2-வது போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், ரோஹித் சர்மா தலைமையிலான அணி தொடர்ச்சியாக 3வது தொடரை கைப்பற்றிய சாதனை கிடைக்கும். இதுவரை எந்தவொரு டி20 கேப்டனும் செய்யாத மிகப்பெரிய சாதனையை ரோஹித் சர்மா படைப்பார்.

அதாவது, டி20 தொடரில் சொந்த மண்ணில் அவர் இதுவரை 16 போட்டிகளில் 15 போட்டிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். இதேபோல தான் இங்கிலாந்து கேப்டன் மோர்கன், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன ஆகியோரும் இதே எண்ணிக்கையிலான வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். இன்னும் இவர் ஒரு வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடிப்பார். இதுவரை டோனி 10 வெற்றிகளும், விராட் கோலி 13 வெற்றிகளையும் பெற்று தந்துள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி மொத்தமாக விளையாடிய 24 டி20 போட்டிகளில் 22 போட்டிகளில் வெற்றி பெற்றுத்தந்துள்ளார். இதே போல், இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால், ரோஹித் கேப்டன்சியில் இந்தியாவில் தொடர்ச்சியாக பெறப்போகும் 11வது வெற்றியாக இருக்கும்.

மேலும் ரோஹித் சர்மா இன்னும் 19 ரன்கள் அடித்தால், டி20 போட்டியில் 1000 ரன்களை கடப்பார். இதுவரை யாரும் இவ்வளவு வேகமாக எட்டவில்லை. அவர் இந்த சாதனையை 27 இன்னிங்ஸ்களில் படைக்கவுள்ளார்.

இதற்கு முன், விராட் கோலி 30 இன்னிங்ஸிலும், தோனி 57 இன்னிங்ஸிலும் 1000 ரன்களை எட்டியுள்ளனர்.