டிரண்டிங்கில் I Stand with Team India..! வைரலாகும் ரோகித் சர்மாவின் விடியோ..!

டிரண்டிங்கில் I Stand with Team India..! வைரலாகும் ரோகித் சர்மாவின் விடியோ..!

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் ஆட்டம் குறித்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 

டி20 உலககோப்பை:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டி20 உலககோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் முதல் அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடக்கம் - போட்டி அட்டவணை, அணி விவரம்

இந்தியா - இங்கிலாந்து:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி போட்டி நேறு நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இதையும் படிக்க: 1992 இல் என்ன நடந்தது? பாகிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கைக்கு காரணம் என்ன?

இந்தியா படு தோல்வி:

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே 170 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவருமே ஆட்டத்தை முடித்தனர். பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களையும் குவித்த நிந்லையில், இந்திய பவுலரால் ஒருவரால் கூட விக்கெட் எடுக்க முடியவில்லை.

T20 World Cup: England beat India to reach finals | டி20 உலகக் கோப்பை:  இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

அழுத ரோகித்:

போட்டி முடிந்த பின்னர் பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் கைக்கொடுத்த ரோகித், நேராக டக் அவுட்டிற்கு சென்று அமர்ந்துவிட்டார். அங்கு நீண்ட நேரம் தலைகுனிந்தபடி இருந்த அவர் மன வேதனையில் அழுத காட்சிகள் வெளியாகி சமூக வலை தளங்களின் வேகமாக பரவ தொடங்கியது.

I Stand with Team India:

இந்தியாவின் இந்த தோல்விக்கு பல விமர்சங்கள் எழுந்து வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும்  I Stand with Team India எனற வாசகத்துடன் இந்திய அணியுடன் நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பையின் இறுதி ஆட்டம் நவம்பர் 13 ஆம் தேதி நடக்கவுள்ளது.