சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட்கோலி.!!

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி அடைந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட்கோலி.!!

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி அடைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், 297 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. இதில், விராட் கோலி 9-வது ரன்னை எடுத்தபோது இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை அடைந்தார்.

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு வெளியே ஐந்தாயிரத்து 65 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. கேப்டன் பொறுப்புகளிலிருந்து விலகிய பிறகு விராட் கோலி விளையாடும் முதல் ஒருநாள் ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், சரியாக விளையாடாமல் சொதப்பி வந்த கோலி, தற்போது படிப்படியாக பார்முக்கு திரும்பி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.