ஒரு நாள் போட்டிக்கான  தரவரிசை பட்டியலில் விராட் கோலி பின்னடைவு...

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான  தரவரிசை பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான  தரவரிசை பட்டியலில் விராட் கோலி பின்னடைவு...

 ஒரு நாள் போட்டிக்கான ஆடவர் கிரிக்கெட் அணியின்  தரவரிசை பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் 2 மற்றும் மூன்று ஆகிய இடங்களை முறையே இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பிடித்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டீ காக் முதல் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் மற்றும்  ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முறையே 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.