டேட்டிங் செல்ல ரூ.300 வேண்டும்.. ரூ.500 அனுப்பிய அமித் மிஸ்ரா.. அதிர்ந்த சமூக வலைதளம்..!

டேட்டிங் செல்ல ரூ.300 வேண்டும்.. ரூ.500 அனுப்பிய அமித் மிஸ்ரா.. அதிர்ந்த சமூக வலைதளம்..!

அமித் மிஸ்ரா:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா. லெக் ஸ்பின்னர்களில் முக்கியமானவராக அறியப்பட்டவர். இந்திய அணிக்காவும், ஐபிஎல் தொடர்களிலும் பல ஆண்டுகள் 
விளையாடியுள்ளார். இதுவரை அவர் இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்:

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தோரின் பட்டியலில் அமித் மிஸ்ராவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் அமித் மிஸ்ரா, தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளித்தும் வருவார். 

சுரேஷ் ரெய்னா அசத்தல்:

அந்த வகையில், சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணியும், ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். அப்படி விளையாடும் போது, இந்திய அணிக்காக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலியாவின் பென் டன்க்கை கேட்ச் மூலம் அவுட்டாக்கினார். 

டைம் மெஷின் வேண்டும்:

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்த அமித் மிஸ்ரா, ”பல ஆண்டுகளுக்கு பிறகு அதே எனர்ஜியுடன் ரெய்னா பீல்டிங் செய்ததாகவும், இதற்காக டைம் மெஷினை தாருங்கள்” எனவும் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் பாசிட்டிவ்வான கமெண்ட்ஸ் அளித்து வந்தனர். 

டேட்டிங் செல்ல ரூ.300 வேண்டும்:

இடையில் சம்பந்தமே இல்லாமல் ஒரு நபர், தனது காதலியுடன் வெளியே செல்ல வேண்டும் ஒரு ரூ.300 கொடுங்கள் கேட்டிருக்கிறார். பொதுவாக பிரபலங்கள் ஏதேனும் போஸ்ட் போடும் போது, சமூக வலைதளங்களில் இதுபோன்று ஏடாகூடமான கமெண்ட்ஸ்கள் வருவது வழக்கம் தான். பெரும்பாலும் இதனை பலரும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுவர். 

நபருக்கு பணம் அனுப்பிய அமித் மிஸ்ரா:

ஆனால் அமித் மிஸ்ரா, அவ்வாறு கடந்து செல்லாமல், ”அந்த நபரின் யுபிஐ தகவல்களை வாங்கி ரூ.500 அனுப்பி அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து மீண்டும் தனது ட்விட்டரில்” பதிவிட்டுள்ளார். அத்தோடு அந்த ”இளைஞருக்கு வாழ்த்தும்” தெரிவித்திருந்தார். அமித் மிஸ்ராவின் இந்த செயல், சமூக வலைதளத்தில் வேகமாக உலா வந்து கொண்டிருக்கிறது.