ஜெரெமியைத் தொடர்ந்து, இந்தியாவின் மூன்றாவது தங்கத்தை வென்ற அசிந்தா!

ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவில், பளுதூக்கல் போட்டியில் 313 கிலோ எடைத் தூக்கி, தங்கம் வென்றிருக்கிறார் அசிந்தா ஷியுலி.

ஜெரெமியைத் தொடர்ந்து, இந்தியாவின் மூன்றாவது தங்கத்தை வென்ற அசிந்தா!

2002ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளின் மூன்றாவது நாளில், பளுதூக்கல் போட்டியில், தனது மூன்றாவது தங்கத்தை வென்றது இந்தியா.

பளுதூக்கல் போட்டியில், ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவில், 20 வயதான அசிந்தா ஷியுலி 143 கிலோ, மற்றும் 170 கிலோ பளு தூக்கி, 313 கிலோ எடையோடு, தங்கத்தைக் கைப்பற்றினார்.

மேலும் படிக்க: காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது தங்கம் வென்றது இந்தியா!

மலேசியாவைச் சேர்ந்த எரி ஹிடாயத் முகமது, இவருக்கு கடும் போட்டியாளராக இருந்த நிலையில், 138 கிலோ மற்றும் 165 கிலோ பளு தூக்கி, 303 கிலோ உயர்த்தி வெள்ளி வென்றார். கனடாவைச் சேர்ந்த ஷாட் டார்சினி, 135 கிலோ மற்றும் 163 கிலோ பளு தூக்கி, வெண்கலம் வென்றார்.

137 கிலோ, 140 கிலோ, 143 கிலோக்களைத் தூக்கி, மூன்று க்ளீன்-களுடன், புதிய சாதனைஅயி இந்த போட்டியில் படைத்துள்ளார். அவரது சிறந்த பளுவாக 143 கிலோ அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. க்ளீன் மற்றும் ஜெர்க்-கில், மற்றவர்களை விட ஐந்து கிலோ அதிகமாகத் தூக்கிய அசிந்தா, கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.

மலேசிய வீரரும் 176 கிலோ தூக்க முயற்சி செய்திருக்கிரார். ஆனால், அவரால் முடியவில்லை. போட்டியின் இறுதி வரைக் காத்திருந்த அசிந்தாவை தங்க பதக்கம் அலங்கரித்தது. 10 வருடங்களுக்கு முன்பு, குவஹாடியில் நடந்த ஜூனியர் சேம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பெற்று அனைவரது கவனத்தையும் பெற்றார்.

மீராபாய் சானுவுக்கு அடுத்து, ஆண்களுக்கான 67 கிலோ பிரிவில், இந்த பளுதூக்கல் போட்டியிலேயே, முன்பு, ஜெரெமி லால்ரினுங்கா தங்கம் வென்ற நிலையில், இது இந்தியாவின் மூன்றாவது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மீராபாய் சானு (தங்கம்), சங்கேத் சர்கார் (வெள்ளி), பித்யாராணி தேவி (வெள்ளி) மற்றும் குருராஜ் பூஜாரி (வெண்கலம்), ஜெரெமி லால்ரினுங்கா (தங்கம்) ஆகியோரைத் தொடர்ந்து, பளுதூக்குதல் அரங்கில் இந்தியா பெற்ற ஆறாவது பதக்கமாகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்