வரலாற்றை மாற்றி எழுதுமா நியூசிலாந்து..?

வரலாற்றை மாற்றி எழுதுமா நியூசிலாந்து..?

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது

டி20 உலககோப்பை:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டி20 உலககோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து - பாகிஸ்தான், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

T20 World Cup 2022 New Zealand vs Pakistan 1st Semi Final Match preview  Pakistan set for New Zealand showdown after late surge to the semis - NZ vs  PAK T20 WC 2022

நியூசிலாந்து vs பாகிஸ்தான்:

நியூசிலாந்து vs பாகிஸ்தான் இதுவரை விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தானே வென்றுள்ளது.
இதுவரை மூன்று முறை உலகக் கோப்பை, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் மோதிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறைகூட நியூஸிலாந்து வென்றதில்லை. 

இதையும் படிக்க: பயிற்சியின் போது காயமடைந்த ரோகித்...இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடுவாரா?!!

3 முறை தோல்வி:

1992-ஆம் ஆண்டு, 50 ஓவர் உலகக் கோப்பை, 1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை ஆகிய மூன்று தொடர்களிலும் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் அரையிறுதிப் போட்டிகளில் தான். 

NZ Vs PAK, 2nd T20I: Pakistan Unchanged, Kane Williamson, Trent Boult  Return For New Zealand

2022 உலக கோப்பை:

இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் தலா 3 போட்டிகளில் வென்றிருக்கின்றன. அதனால் இன்று நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி யாருக்கு என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிரிகெட் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

Full Scorecard of New Zealand vs Pakistan 1st SF 1991/92 - Score Report |  ESPNcricinfo.com

வரலாற்றை மாற்றுமா நியூசிலாந்து?

பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி நடக்கும் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானம் முதலில் பேட் செய்யும் அணிக்குச் சாதகமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. தற்போதைய தொடரில், இந்த மைதானத்தில் நடந்த மொத்தம் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் ஆடிய அணியே வென்றிருக்கிறது. 1992 இல் வென்றதைப் போல இத்தொடரிலும் வெல்வோம் என பாகிஸ்தான் ரசிகர்கள் கூறி வரும் வேளையில், வரலாற்றை மாற்றுமா நியூசிலாந்து என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.