210 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்க அணி : சாதனை படைக்குமா இந்திய அணி?

5 விக்கெட் வீழ்த்தி அசத்திய பும்ராவின் அபார பந்து வீச்சால், தென் ஆப்பிரிக்காவை 210 ரன்களில் இந்திய அணி சுருட்டியது.

210 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்க அணி :  சாதனை படைக்குமா இந்திய அணி?

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் குவித்தார். புஜாரா 43 ரன்களும், ரிஷப் பண்ட் 27 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் சேர்த்தார். டெம்பா பவுமா 28 ரன்களும், கேசவ் மகராஜ் 25 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட் எடுத்து அசத்தினார். உமேஷ் யாதவ், முகமது ஷமி தலா 2  விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 7 ரன்களிலும், கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்ததாக புஜாராவுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். பின்னர் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 17 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை போன்று, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, வரலாற்று சாதனை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.