"WILL YOU MARRY ME?" இந்திய கிரிக்கெட் வீராங்கனையிடம் காதலை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்..!

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர், நீண்ட நாள் காதலியிடம் காதலை வெளிப்படுத்தி நெகிழ்ச்சி..!

"WILL YOU MARRY ME?" இந்திய கிரிக்கெட் வீராங்கனையிடம் காதலை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்..!

காதல்:

இன்றைய காலகட்டத்தில் காதலை காதலர்கள் வெளிப்படுத்தும் விதம் பார்க்க மிகவும் அழகாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு ஆணோ பெண்ணோ, தனக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றாலோ, அவர்களோடு வாழ்க்கையை பயணிக்க விரும்பினாலோ, அதனை வெளிப்படுத்த பல திட்டங்களை தீட்டுவர். சமீப காலமாக வெளிநாட்டில் காதலை வெளிப்படுத்துவது போன்று இங்கும் மண்டியிட்டு, மோதிரம் கொடுத்து ஆண்கள் தங்களது காதலை காதலியிடம் வெளிப்படுத்துகின்றனர். 

will you marry me?

அப்படி கிரிக்கெட் வீராங்கனையிடம் அவரது நண்பர் தனது காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பிரபல இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தியிடம், அவரது நண்பரும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரருமான அர்ஜூன் ஹொய்சாலா தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் கலக்கிய வேதா: 

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இருவருக்கும் சக வீர,வீராங்கனைகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. வேதா கிருஷ்ணமூர்த்தி இதுவரை 48 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும், 76 சர்வதேச இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அர்ஜூன் கர்நாடக ரஞ்சி அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.