மகளிர் சர்வதேச குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை..!

மகளிர் சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.

மகளிர் சர்வதேச குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை..!

12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த நிகத் ஜரின், இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித் போங்கை எதிர்கொண்டார். தனது அபார திறனை வெளிப்படுத்தி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நிகாத் ஜரீன் 5க்கு 0 என்ற புள்ளிகளில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை வென்றார்.

இதன்மூலம் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனையானார். இந்நிலையில் தங்கம் வென்ற நிகத் ஜரினுக்கு பிரதமர் மோடி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தனது மகள் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிகாத் ஜரீனின் தாய் பர்வீன் சுல்தானா தனது மகள் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் எனக் கூறினார்.