உலக ஜூனியர் தடகள போட்டி: தமிழக வீரர்கள் 2 பேர் வெள்ளிப்பதக்கம்..!

உலக ஜூனியர் தடகள போட்டி: தமிழக வீரர்கள் 2 பேர் வெள்ளிப்பதக்கம்..!

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் 2 பேர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி:

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கொலம்பியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில்  20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். தடகள வீரர்கள் செல்வ பிரபு மற்றும் பரத் ஸ்ரீதர் இருவரும் சென்னை வந்தனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரத் ஸ்ரீதர்:

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பரத் ஸ்ரீதர், உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 4*400மீ தொடர் ஓட்டம் கலப்பு பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது, இந்த தடவை போட்டி கடினமானதாக இருந்ததாகவும், நாங்கள் கொண்ட பயிற்சியின் காரணமாக இந்த பதக்கத்தை வென்றதாகவும் கூறினார்.

மேலும் தன்னை தயார் படுத்திய பயிற்சியாளருக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது ஜூனியர் பிரிவில் பதக்கங்களை வென்ற நான் அடுத்ததாக சீனியர் ஆட்டப்பிரிவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்று கூறினார். 

செல்வ பிரபு:

இவரைத்தொடர்ந்து, உலக ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான டிரிபிள் ஜம் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான செல்வ பிரபு, 16.15 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பிரபு, இந்த போட்டிக்காக தன்னை ஊக்குவித்த அரசுக்கும், தமிழ்நாடு தடகள அசோசியேசனுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

தமிழ்நாடு தடகள அசோசியேசன்:

உலக ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இருவருக்கும், அரசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தடகள அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.