உலகக் கோப்பை கால் பந்து..! எதிர்பாராத திருப்பங்கள்..! தோல்வியை தழுவிய முக்கிய அணிகள்..!

உலகக் கோப்பை கால் பந்து..! எதிர்பாராத திருப்பங்கள்..! தோல்வியை தழுவிய முக்கிய அணிகள்..!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கனடாவுக்கு அதிர்ச்சித் தோல்வியை கொடுத்து குரோஷியா அணி வெற்றி பெற்றது. 

குரோஷியா - கனடா:

கத்தார் நாட்டில் 22-வது FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நிகழ்ந்த ஆட்டத்தில் ஆட்டத்தில் குரோஷியா - கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கனடா அணியை ஒன்றுக்கு நான்கு என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி குரோஷியா அணி  அதிர்ச்சியைப் பரிசளித்தது. 

குரோஷியாவுக்கு குஷி: கனடா ஏமாற்றம் | Dinamalar

பெல்ஜியம் - மொராக்கோ:

இதற்கடுத்து நடைபெற்ற  ஆட்டத்தில் பெல்ஜியம், மொராக்கோ அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் பூஜ்யத்துக்கு பூஜ்யம் என்ற சமனிலையில் இருந்தன. இரண்டாவது பாதியின் 73-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அப்தெல் ஹமீது சபிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் சகாரியா அபுக்லால் ஒரு கோல் அடித்தார். இறுதியில், மொராக்கோ அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

FIFA WC 2022 | பெல்ஜியத்தை அப்செட் செய்த மொராக்கோ: வெற்றியை தாயுடன்  கொண்டாடிய அக்ரஃப் ஹக்கிமி | fifa wc 2022 morocco upsets belgium achraf  hakimi celebrates victory with mother ...

இதையும் படிக்க: கால்பந்து போட்டியில் 92 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சாதனை..! வேற லெவல்..!

ஸ்பெயின் - ஜெர்மனி:

குரூப் இ பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் சந்தித்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியின் 62-வது வினாடியில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் ஸ்பெயின் அணிக்கு சாதகமாகி இருந்தது. இந்த சூழலில் ஸ்பெயின் அணிக்கு பதிலடியாக ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று  என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

உலக கோப்பை கால்பந்து- ஸ்பெயின், ஜெர்மனி ஆட்டம் டிரா ஆனது | World Cup  Football Spain vs Germany draw

ஜப்பான் - கோஸ்டாரிகா:

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் - கோஸ்டாரிகா அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்கமுடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில்  பூஜ்யத்துக்கு பூஜ்யம் என சமநிலையில் இருந்தன. பின்னர் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணியின் கெய்ஸர் புல்லர் ஒரு கோல் அடித்தார்.இதனால் அந்த அணி முன்னிலை பெற்றது பின்னர் ஜப்பான் அணி பதிலடி கொடுக்க கோல் அடிக்கவில்லை. இதனால் ஒன்றுக்கு பூஜ்யம் என கோஸ்டாரிகா வெற்றி பெற்றது.

வாழ்வா சாவா போராட்டம்.. ஜப்பான் அணியை வீழ்த்தி கோஸ்டாரிகா த்ரில் வெற்றி..

இன்றைய போட்டிகள்:

இதையடுத்து இன்று நடைபெறும் போட்டியில்,

1) செர்பியா- காமெரூன்;

2) கானா- தென்கொரியா;

3) பிரேசில் - சுவிட்சர்லாந்து மற்றும்

4) போர்த்துகல் - உருகவே அணிகள் மோதுகின்றன.