ஐபிஎல் 15 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி அணியில் இருக்கும் தினேஷ் கார்த்திக் அசத்தி வருவதால், அவருக்காக இந்திய அணியின் கதவு திறக்க பட உள்ளது.
நடப்பு சீசனில் இளம் வீரர்கள் தங்களது திறமைகளை காட்டி வந்தாலும், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்களும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பு சீசனில் தொடர்ந்து 2 போட்டிகளில் ஆர்சிபி அணியை தனி ஆளாக நின்று காப்பாற்றி வெற்றி பெற வைத்துள்ளார் தினேஷ் கார்த்திக். ஐபிஎல் மெகா ஏலத்தில் தினேஷ் கார்த்தியை எடுக்க பல அணிகள் போட்டி போட்டு வந்தன. இறுதியில் தினேஷ் கார்த்திகை பெங்களூரு அணி வாங்கியது.
இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்காக உலக கோப்பை தொடரில் விளையாடினார். அதன் பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்காததால் வர்ணனையாளராக தனது பணியை தொடங்கினார். இதை தொடர்ந்து தமிழக ரஞ்சி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார். இது தினேஷ் கார்த்திக்கை மேலும் விரக்தி அடைய செய்தது. இதனால், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபிக்க தினேஷ் கார்த்திக் காத்திருக்கிறார்.
அதற்கேற்ப அவருக்கு ஆர்சிபி அணியில் ஃபினிஷர் ரோல் வழங்கப்பட்டது. கார்த்திக் முதல் போட்டியில் 14 பந்துகளில் 32 ரன்களும், இரண்டாவது போட்டியில் 7 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தார்.
நேற்று ராஜஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி 86 ரங்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக், 23 பந்துகளில் 44 ரன்கள் அடித்து விளாசினார். இவரில் ஸ்ட்ரைக் ரேட் 204.5 ஆக உள்ளது. இதனால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திகை சேர்க்க ரோகித் சர்மா முடிவு செய்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் அல்லது ராகுல் இடம் ஆபத்தில் உள்ளது.