உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்,... இறுதி போட்டிக்கு முன்னாள் இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலைமையா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்,... இறுதி போட்டிக்கு முன்னாள் இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலைமையா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்தை வென்றதன் மூலம்  நியூஸிலாந்து அணி டெஸ்ட் அரங்கில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து, நியூஸிலாந்து  அணிகள் இடையே நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட  டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி நியூஸிலாந்து அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

இதனால் சௌத்தாம்டன் நகரில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முதல் நிலை அணியாக  நியூஸிலாந்து  களமிறங்கவுள்ளது. நியூஸிலாந்து அணி 123 புள்ளிகளையும், இந்திய அணி 121 புள்ளிகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.