ரொனால்டோ செய்த தரமான சம்பவம்,. 29,377 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த  கொக்கோ கோலா நிறுவனம்.! 

ரொனால்டோ செய்த தரமான சம்பவம்,. 29,377 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த  கொக்கோ கோலா நிறுவனம்.! 

ஒரே ஒரு சம்பவத்தால் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ

யூரோ சாம்பியன் 2021 தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்பெயின்,போர்த்துக்கல், ஜெர்மனி, இத்தாலி,இங்கிலாந்து போன்ற பல முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது

இந்த விளையாட்டின் ஒருபகுதியாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  தன் முன் இருந்த கோக்க கோலா பாடியலை ஓரத்தில் வைத்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கோக்க கோலாவிற்குப் பதில் தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அந்தக் காணொளியும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மழமழவென காட்டுத்தீ போல் பரவியது. இந்த சம்பவத்தின் காரணமாக கொக்கோ கோலா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 29,377 கோடி ரூபாய் அளவிற்கு  4 பில்லியன் அமெரிக்க டாலர்  அளவிற்கு 
நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.