ஐபிஎல் திருவிழா இன்று கோலாகல ஆரம்பம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபிஎல் திருவிழா இன்று கோலாகல ஆரம்பம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி பிரமாண்டமான ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நடைபெற உள்ளது. 

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளது. 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே போட்டி தொடங்கும் முன்பு பிரமாண்டமான முறையில் ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com