உலகக் கோப்பை கால்பந்து..! அனல் பறந்த ஆட்டங்கள்..!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி பிரேசில் அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.
தென் கொரியா- கானா:
கத்தார் நாட்டில் 22-வது FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. அதில் நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நிகழ்ந்த குரூப் எச் பிரிவு ஆட்டத்தில் ஆட்டத்தில் தென் கொரியா- கானா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென்கொரியா அணியை மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி அதிர்ச்சியைப் பரிசளித்தது.
செர்பியா - காமெரூன்:
இதற்கடுத்து நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் செர்பியா - காமெரூன் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். 63 மற்றும் 66 நிமிடங்களில் கோல்கள் அடித்து மூன்றுக்கு மூன்று என்ற ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது காமெரூன். இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. இறுதியில் எந்த அணியாலும் மேலும் கோலடிக்க முடியாததால், ஆட்டம் மூன்றுக்கு மூன்று என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
போர்த்துகல் - உருகவே:
குரூப் எச் பிரிவில் நடந்த ஆட்டத்தில் போர்த்துகல் - உருகவே அணிகள் சந்தித்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் உருகவேயே தோற்கடித்தது.
பிரேசில் - சுவிட்சர்லாந்து:
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் முன்னணி வீரர் நெய்மார் கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் இந்த ஆட்டத்தில் அவர் ஆடவில்லை. அவர் இல்லாவிட்டாலும் பிரேசில் வீரர்கள் தொடக்கம் முதலே அதிவேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுவிட்சர்லாந்து வீரர்கள் கோல் அடிப்பதை காட்டிலும் எதிரணியின் வாய்ப்பை முறியடிப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தினர். முடிவில் பிரேசில் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
இன்றைய போட்டிகள்:
இதையடுத்து இன்று நடைபெறும் போட்டியில்,
1) ஈக்வாடார் -செனகல்;
2) நெதர்லாந்த் - கதார்;
3) ஈரான் - அமெரிக்கா மற்றும்
4) வேல்ஸ்- இங்கிலாந்த் - அணிகள் மோதுகின்றன.