கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு! மதிப்பு ஒரு கோடி என தகவல்!

தாராபுரம் அருகே சுமார் ஒரு கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அறநிலைத் துறையினர் மீட்டனர்.

கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு! மதிப்பு ஒரு கோடி என தகவல்!

திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரேவ் கிராமம், அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான  புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலம்  க.ச.எண். 200/1 -இல் 11.10ஏ/செ  மற்றும் க.ச.எண்.200/3-இல் 0.50 ஏ/செ ஆக மொத்தம் 11.63 ஏ/செ பூமி யை ஆணையர் மற்றும் திருப்பூர் இணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி  ஆய்வு செய்யப்பட்டபோது மேற்படி நிலத்தினை ஆக்கிரமிப்புதார்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைத்ததனர்.

மேலும் படிக்க | மோசடி செய்யும் வட்டி கும்பல்…நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

இதன் அடிப்படையில் இன்று 22.09.2022 திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.இரா.செல்வராஜ், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வர் சா.ஆதிரை, செயல் அலுவலர், சொ.சுந்தரவடிவேல்,சதீஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டு அந்த இடத்தில் அறிவிப்பு பலகை திருக்கோயில் சார்பாக வைக்கப்பட்டது.  இந்நிலத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி  ஆகும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி 54 லட்சம் மோசடி…ஆசிரியர் கைது!