தேனியில் இருந்து இனி சென்னைக்கு நேரடியாக ரயிலில் செல்லலாம்?

தேனி - சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022-ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தேனியில் இருந்து இனி சென்னைக்கு நேரடியாக ரயிலில் செல்லலாம்?

தேனி - சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022-ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

சென்னை - மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. போடி - தேனி - மதுரை இடையே 2010-ல் தொடங்கிய அகல ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைந்த உடன், ரயில் சேவை துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக போடி - தேனி - மதுரை குறுகிய ரயில் பாதையாக இருந்த வரை, மதுரை வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. திண்டுக்கல் - பழனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த உடன் சென்னையில் இருந்து பழனிக்கு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தேனி வழியாக போடி வரை ரயில் சேவையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தேனி வழியாக போடிக்கு ரயில் இயக்கப்படும் பட்சத்தில் தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, விருப்பம் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.