மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம்:  அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கொரோனா இரண்டாம் அலை எதிரொலியாகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும் மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் இன்று முதல்  புதிய கல்வி ஆண்டு தொடங்குகிறது. இந்தச் சூழலில் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வு நடைபெறும் என்று கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக திருச்சியில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனைத்து துறையினருக்குமே நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகக் குறிப்பிட்ட காலம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்று பரவல் எந்த அளவுக்கு விரைவாகக் குறைகிறதோ அதற்கேற்ப விரைவாக பொதுத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம் என்று தெரிவித்தார்.