அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா - ஒரே நேரத்தில் மாலை அணிவிக்க வந்த விசிக - பாஜகவினர் இடையே மோதல்!!

அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விசிக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா - ஒரே நேரத்தில் மாலை அணிவிக்க வந்த விசிக - பாஜகவினர் இடையே மோதல்!!

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு, முக்கிய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், பாரதிய ஜனதா கட்சியினரும் ஒரே நேரத்தில் வந்ததால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் ஒரே நேரத்தில் மாலை அணிவிக்க வந்த போது, இரு கட்சியினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் கீழே தள்ளி மோதலில் ஈடுபட்டதால் கலவர பூமியாக மாறியது.

இதேபோல், சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த பாஜகவினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.