விவசாயியிடம் 155 ரூபாய் கூடுதலாக வட்டி வசூல் :  ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு தனியார் வங்கிக்கு உத்தரவு !!

விவசாய கடனுக்கு 155 ரூபாய் விவசாயிடம் கூடுதலாக வசூலித்த தனியார் வங்கிக்கு 10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு கூறியுள்ளது.

விவசாயியிடம் 155 ரூபாய் கூடுதலாக வட்டி வசூல் :  ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு தனியார் வங்கிக்கு உத்தரவு !!

விருதுநகர் மாவட்டம்   சிவகாசி  நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சித்திரைக்கனி  இவர் விவசாயி ஆவார். அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் இந்தியன் வங்கியில் விவசாய நகைக்கடன் பெற்று உள்ளார். 

அவரிடம் விவசாய நகைக்கடனுக்கு கூடுதலாக 155 ரூபாய் வட்டி மற்றும் மானிய சலுகை ஆகியவற்றில்  சேவை குறைபாடு ஏற்பட்டதால் அவருக்கு கூடுதலாக வட்டி மற்றும் மானிய சலுகையாக மொத்தம் ரூபாய் 2135 மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக (ரூ.5000/-) மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் (ரூ. 3000/-) ஆக மொத்தம் (ரூ.10135/-) ரூபாய் விவசாயிக்கு  வழங்க வேண்டுமென்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட  நுகர்வோர் ஆணைய நீதிபதி  சேகர் அவர்கள்  உத்தரவிட்டார்.  ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.