முன்னாள் முதல்வர் கலைஞரின் 16 அடி உயர சிலை : வரும் மே 28 -ஆம் தேதி திறப்பு!!

முன்னாள் முதலமைச்சரான முத்தமிழ் கலைஞரின் சிலை சென்னை அண்ணா சாலையில் வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞரின் 16 அடி உயர சிலை : வரும் மே 28 -ஆம் தேதி திறப்பு!!

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் மூன்றாம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு தனியாக சிலை அமைக்கப்படும் எனவும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியன்று அறிவித்து இருந்தார். அதன் பின்னதாக சுமார் 1.50 கோடி ரூபாய் செலவில் இந்த சிலை அமைக்கப்படுகிறது. 

தற்போது அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை, பீடம் அமைக்கும் பணிகள் பொதுபணித்துறைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. கருணாநிதிக்கு இதுவரை அமைக்கப்பட்ட சிலைகளில் அதிக உயரமாக 16 அடியில் இந்த வெண்கலச் சிலையாக இது அமைய இருக்கிறது. 

இந்நிலையில் சென்னை அண்ணாச் சாலை ஓமந்தூரர் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைய உள்ள முத்தமிழ் கலைஞரின் சிலை வருகிற மே 28 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இச்சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.