BE  பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடர்பாக அமைச்சர் பொன்முடி கூறியது..!

BE  பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடர்பாக அமைச்சர் பொன்முடி கூறியது..!

நீட் தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களுக்கு பிறகு BE  பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்

நாளை தொடங்கவுள்ள கலந்தாய்வு:

தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொதுப்பிரிவு மாணவர்களின் ஆன்லைன் கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. ஆனால் நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால், பொது கலந்தாய்வு திட்டமிட்டபடி தொடங்குமா? என்ற குழப்பம் நீடிக்கிறது. இதனால் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

காலி இடங்கள்:

என்ஜினீயரிங் கவுன்சிலின் திட்டமிட்டபடி நாளை தொடங்கினால், நீட் தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்கும் பட்சத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் விட்டுவிடுவர். இதனால் பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்பட்டு விடும்.

மேலும் படிக்க: https://www.malaimurasu. com/posts/cover-story/Friday-Walk-Seeking-Justice

தள்ளி போகுமா கவுன்சிலிங் தேதி?:

இதற்கு முன்பு ஏற்கனவே, ஆகஸ்டு 20 ஆம் தேதி என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு கவுன்சிலிங் தேதியை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு மாற்றி அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது, நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28 ஆம் தேதிக்கு தள்ளிப்போவதால் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறுமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை ஆலோசனை:

இந்நிலையில், முடிவுகள் வெளியீடு குறித்து தேசியத் தேர்வு முகமையுடன் பேசிவருவதாக, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மேலும்,  என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை 1 வாரம் தள்ளி வைக்கலாமா? என்றும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை நீட் தேர்வு முடிவுகளுக்கு முன்பே பொறியியல் கலந்தாய்வு நடத்தினால், முடிவுகள் வெளியான பின்னர் பல இடங்கள் காலியாகும் சூழல் உருவாகும் என்றும் கேள்விகள் நீடித்து வந்தது.

கேள்விகளுக்கு முற்றுபுள்ளி:

இந்நிலையில் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அதாவது, நீட் தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களுக்கு பிறகு BE  பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும் காலியிடங்களை தடுக்கவும், மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமத்தை தடுக்கவும் கலந்தாய்வு ஒத்திவைக்க படுவதாக தெரிவித்துள்ளார்.