தமிழக காவல்துறையின் `ஸ்டாமிங் ஆப்பரேஷன்`... இதுவரை 2, 512 குற்றவாளிகள் கைது... 

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 நாட்களில் 2 ஆயிரத்து 512 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறையின் `ஸ்டாமிங் ஆப்பரேஷன்`... இதுவரை 2, 512 குற்றவாளிகள் கைது... 

தமிழகம் முழுவதும் பழிக்குப்பழி கொலைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக கூலிப்படைகள் மூலமாக தலையை துண்டித்து கொடூரமாக கொலைகள் அரங்கேறி வருகின்றன. இதனால் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சென்னை உள்பட மாநகர காவல் ஆணையர் களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடைபெற்ற அதிரடி சோதனையில், 2 ஆயிரத்து 512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்டார்மிங் ஆபரேசன் நடவடிக்கையின் மூலம் 16 ஆயிரத்து 370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் 2 ஆயிரத்து 512  பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 5 நாட்டுத் துப்பாக்கி, 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என மொத்தம் 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலை குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள், தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.