2 ஆயிரம் ரூபாய் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் - அமைச்சர் அறிவிப்பு

2 ஆயிரம்  ரூபாய் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் - அமைச்சர் அறிவிப்பு

2 ஆயிரம் ரூபாய் பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் - கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் 2 ஆயிரம் ரூபாய் பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் என பேட்டியளித்தார்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30.5 கோடி மதிப்பில் கூடுதல் ஒருங்கினைந்த தாய் சேய் நல பிரிவு கட்டிடம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுக்கான 50 படுக்கை கொண்ட கூடுதல் கட்டிடம் ஆகியவற்றுக்கான பூமி பூஜை மாவட்டத்தை சேர்ந்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொருப்பு மணிவன்னன்,  மருத்துவக்கல்லூரி முதல்வர் சத்தியபாமா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க| பழனி முருகன் கோயிலில் புதிய கார் பாதை அமைக்க திட்டம் - அமைச்சர் சேகர்பாபு

விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 
2 ஆயிரம் ரூபாய் பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் என்றும் ரேசன் கடைகள் மட்டுமல்ல அனைத்து கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்ததுடன் டி.மானிடேசன் காலங்களில் அதிமுக அரசு கூட்டுறவு வங்கிகளில் பணத்தை மாற்றியது என திமுகவே குற்றம் சாட்டியுள்ளது அந்த குற்றச்சாட்டுகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியில் நடக்காது எனவும் அதுபோல் பணபரிவர்த்தனைகளை கூட்டுறவு வங்கிகள் செய்தால் அதன் அங்கிகாரம் ரத்தாகும் எனவும் பேட்டியளித்தார். உடன் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் இருந்தனர்.