சிவகங்கையில் நாளை முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு!ஏன் தெரியுமா?

சிவகங்கையில் நாளை முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு!ஏன் தெரியுமா?

சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் 221ஆவது குருபூஜையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருதுபாண்டியர்களின் 221ஆவது குருபூஜை:

வருகிற 24 ஆம் தேதி மாமன்னர்கள் மருது சகோதரர்களை தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் 221 வது நினைவு தினம் அரசு சார்பிலும், 27 ஆம் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள்  என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இதையும் படிக்க: ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?

தேவர் ஜெயந்தி பூஜை:

அதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவும் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அங்கும் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சமூதாய மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

144 தடை உத்தரவு:

அதன் காரணமாக இந்த விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக நாளை 23 ஆம் தேதி முதல் வருகிற 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்  அறிவித்துள்ளார்.