காமன் வெல்த் போட்டியில் தங்கம் வாங்கி கொடுத்த தடகள வீரரிடம் 23 கோடி ரூபாய் நில மோசடி...

காமன் வெல்த் போட்டியில் தங்கம் வாங்கி கொடுத்த தடகள வீரரிடம், 23 கோடி ரூபாய் நில மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காமன் வெல்த் போட்டியில் தங்கம் வாங்கி கொடுத்த தடகள வீரரிடம் 23 கோடி ரூபாய் நில மோசடி...

கடந்த 2002-ம் ஆண்டு காமன்வெல்த் டென் பின் பவுலிங்க் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேக் அப்துல் ஹமீது, அசமத்துல்லா என்பவர் மூலம்  ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார். இந்நிலையில், நிலம் வாங்கி கொடுக்கும் விவகாரத்தில் தம்மை 23 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அசமத்துல்லா மீது பள்ளிக்கரணை போலீசில் சேக் அப்துல் ஹமீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை வாபஸ் பெறுமாறு மஸ்ஜித் அஜ்முதின் என்பவர் மிரட்டியதாகவும்,  சென்னையில் எந்த தொழிலும் செய்யக் கூடாது என கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அதில்  குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் கோவிலம்பாக்கத்தில் உள்ள 4 புள்ளி 12 ஏக்கர் நிலத்தில் அத்துமீறி நுழைந்து, தமது நிறுவன பலகைகளை உடைத்ததாகவும், அதற்கு காவல் ஆய்வாளர் ஒருவர் உடந்தையாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்  குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக  பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்,  நீதிமன்ற உத்தரவின்படி அசமத்துல்லா, மஸ்ஜித் அஜ்முதின், பாலாஜி,  வழக்கறிஞர் நிவாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.