சென்னையில் 3வது நாளாக வெளுத்து வாங்கிய மழை !!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3வது நாளாக மழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் 3வது நாளாக வெளுத்து வாங்கிய மழை !!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இரவிலும் மழை நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகினர்.

இதேபோல், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைபெய்தது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும், 10 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேங்கிய நீரையும், முறிந்த மரங்களையும் அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.