450 கிலோ கெட்டுபோன உணவுகள் - 20 ஆயிரம் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு துறை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் இயங்கி வரும் பேக்கரி,டீக்கடை ஹோட்டல்,தள்ளுவண்டி கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் தரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகார் வந்துள்ளது.

450 கிலோ கெட்டுபோன உணவுகள் - 20 ஆயிரம் அபராதம் விதித்த உணவு  பாதுகாப்பு துறை

இந்நிலையில் தேவகோட்டை,சிவகங்கை,கண்ணங்குடி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேல்முருகன், சரவணகுமார், முத்துக்குமார், தியாகராஜன் மற்றும் மேஸ்திரி மாணிக்கம் தலைமையில் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர் மஸ்தான் - முதலமைச்சர்

அப்போது பேக்கரியில் காலாவதியான குளிர்பானங்கள்,பிரட்,பன், உடம்புக்கு கேடு விளைவிக்கும் கலர் அதிகம் சேர்த்த இனிப்பு மிட்டாய்கள்,கார வகைகள் மற்றும் உணவகத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த புரோட்டா, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகள்,காடை,காளான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல் சூப்பர் மார்க்கெட்டில் சோதனையின் போது ரசாயனம் கூடுதலாக சேர்த்த அச்சு வெள்ளம் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது மேலும் ரேசன் கடையில் பொது மக்களுக்கு வழங்கும் இலவச பாமாயில் எண்ணெய் உணவகத்தில் பயன்படுத்தியது தெரியவந்தது.

மேலும் படிக்க | எடப்பாடி போட்ட பிச்சை... அண்ணாமலையை விமர்சித்து வார்த்தையை விட்ட முன்னாள் அமைச்சர்


 இதனைதொடர்ந்து பிரியாணி கடையில் நேற்று வேக வைத்த கிரில் சிக்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு சாப்பிட உகந்ததல்ல சான்றிதழ் வழங்கிரூபாய் 20,000/ அபராதம் விதித்தனர், மொத்தமாக சுமார் 450 கிலோ தரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.