மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்...

தமிழகத்தில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்...

தமிழகத்தில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன், தொழில்துறை சிறப்பு செயலராக லில்லி, நுகர்பொருள் வாணிப கழக இணை மேலாண் இயக்குநராக சங்கீதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி, தமிழ்நாடு சாலைகள் திட்ட பணி இயக்குநராக கணேசன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.