ஆவினின் புதிய தயாரிப்புகள் என்னென்ன தெரியுமா?

தமிழக அரசின் ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆவினின் புதிய தயாரிப்புகள் என்னென்ன தெரியுமா?

தமிழக அரசின் ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம், மக்களுக்கு பயன் தரும் வகையில், தரமான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட, பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய 5 புதிய பொருட்களை,  தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆவின் நிறுவனம் சார்பில் ஏற்கனவே பால், குலோப் ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.