சூறைக்காற்றுடன் பெய்த கனமழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம்..  

அந்தியூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 5 ஆயிரம் வாழை மரங்கள்  சேதமடைந்தன.  

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம்..   

அந்தியூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 5 ஆயிரம் வாழை மரங்கள்  சேதமடைந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஒலகடம், தாளபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.  இந்நிலையில், சூறைக்காற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாயின. அறுவடைக்கு மூன்று மாதங்கள் இருந்த நிலையில்  வாழை மரங்கள் சேதமானதால், தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அரசு, தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று, புதுச்சேரியில் பெய்த கனமழையால், மிஷன் வீதியில், சாலையோரம் இருந்த மிகப் பெரிய மரம் விழுந்தது. மரத்தின் அருகே சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் வாடகைக்கு விடும் கடை இருந்த நிலையில், அதன் மீது, மரம் முறிந்து விழுந்ததால் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் சேதமடைந்தன. அத்துடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டதல் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் போக்குவரத்தை மாற்றம் செய்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.