தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது! டிஜிபி அதிரடி!!

தமிழகம் முழுவதும் நள்ளிரவில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், 560 ரவுடிகளை கைது செய்து, பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது!  டிஜிபி அதிரடி!!

தமிழகம் முழுவதும் நள்ளிரவில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், 560 ரவுடிகளை கைது செய்து, பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் முன் விரோதம் காரணமாக ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு, கொலை சம்பவங்கள் அரங்கேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக,  சிறப்பு ஆப்ரேஷனை மேற்கொள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து  எஸ்.பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகள் கொலை குற்றங்களில் ஈடுபட்டவர்களின்  வீட்டினை கண்காணித்து அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் நேற்றிரவு தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் வீடு மற்றும் ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் வீடுகளில்  அந்தந்த மாவட்ட எஸ்.பி மற்றும் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பழைய குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 90 ரவுடிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களில்  6 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

இதேபோல் சென்னை புளியந்தோப்பு பகுதியில் சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி, 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 36 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச்சென்று போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும்  நேற்றிரவு  560 ரவுடிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்  செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.