பீலா ராஜேஷ் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக வரிகள் மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றிய பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிற்சாலைகள் ஆணையர், தொழில் மற்றும் வர்த்தக இயக்குனராக சிஜி தாமஸ் வைத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமை செயலராக விக்ரம் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனராக பங்கஜ்குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.