சிம்ஸ் பூங்காவில் துவங்கிய 62வது பழக் கண்காட்சி.. 2டன் பழங்களை கொண்டு 200க்கும் மேற்பட்ட மாதிரிகள் வடிவமைப்பு!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழ கண்காட்சி துவங்கியது. கோடை சீசனையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

சிம்ஸ் பூங்காவில் துவங்கிய 62வது பழக் கண்காட்சி.. 2டன் பழங்களை கொண்டு 200க்கும் மேற்பட்ட மாதிரிகள் வடிவமைப்பு!!

கோடை சீசனையொட்டி குன்னூர்  சீம்ஸ் பூங்காவில் பிரசத்தி பெற்ற பழக் கண்காட்சி துவங்கியது.

2 டன் பழங்களை கொண்டு உருவாக்கபட்ட பிரம்மாண்ட ராட்சத கழுகு, பாண்டா கரடி, தேனீ பூச்சி, ஊட்டி 200 போன்ற வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பூங்கா முழுவதும் வைக்கப்பட்டுள்ள பால்சம், லில்லியம், மேரிகோல்டு போன்ற 3 லட்சத்து 6 ஆயிரம் மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.

இது தவிர 20க்கும் மேற்பட்ட அரங்குகளில் பழங்களில் மயில், சிங்கம், புலி, மீன் போன்ற அலங்காரங்கள் காட்சிக்காக வைக்கபட்டுள்ளன. இந்த பழக் கண்காட்சி இன்று துவங்கி 2 நாட்கள் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.