தமிழகம் முழுவதும் 78 லட்சம் பேர் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருப்பு - தமிழக அரசு தெரிவிப்பு!!

தமிழகம் முழுவதும் 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 78 லட்சம் பேர் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருப்பு - தமிழக அரசு தெரிவிப்பு!!

கடந்த ஏப்ரல்  மாதம் 30ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 9 ஆயிரத்து 890 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

19 முதல் 23 வயது வரையுள்ள  கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 17 லட்சத்து 83 ஆயிரத்து 755 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 முதல் 35 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 93 ஆயிரத்து 506 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

36 முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 13 லட்சத்து 35 ஆயிரத்து 649 பேரும்,  58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 ஆயிரத்து 259 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 72 ஆயிரத்து 175 பேரும், பெண்கள் 31 ஆயிரத்து 529 உள்பட 1 லட்சத்து 9 ஆயிரத்து 704 பேரும், பார்வையற்ற ஆண்கள் 11 ஆயிரத்து 907 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 381 பேர் உள்பட 17 ஆயிரத்து 288 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 
456 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 479 பேர் உள்பட 13 ஆயிரத்து 935 பேர் பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 58 ஆயிரத்து 795 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 350 நபர்கள் என மொத்தம் 76,35,059 நபர்கள் பதிவு செய்துள்ளதாக  வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.