நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 8 லட்சம் மோசடி - ஒருவர் கைது, இருவர் தலைமறைவு

திண்டுக்கல் அருகே நிலம் வாங்கித் தருவதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 8 லட்சம் மோசடி செய்த 3 பேரில் ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 8 லட்சம் மோசடி - ஒருவர் கைது, இருவர் தலைமறைவு

திண்டுக்கல்- கரூர் சாலையில் உள்ள நந்தவனப்பட்டி வில்லவன் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவர் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்,  ராஜு ,வெங்கடேசன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தாங்கள் குறைந்த விலையில் விவசாய நிலம் வாங்கித்தருவதாக கூறியுள்ளனர். அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தவணைகளாக ரூபாய் 10 லட்சம் வரை கணேசனிடம் மூவரும் வாங்கியுள்ளனர்

அதற்கு ஆதாரமாக எழுதப்படாத பத்திரம் மற்றும் புரோநோட் கணேசனிடம் கொடுத்துள்ள இந்த மோசடி கும்பல், சொன்னது போல், கணேசனுக்கு நிலத்தை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட கணேசன் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தன்னை ஏமாற்றிய கும்பல் மீது புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில்  வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட லட்சுமணன், ராஜு, வெங்கடேசன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் தொடர்புடைய லட்சுமணன் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.