2 - ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்...83% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

2 - ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்...83% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

சென்னையில் 2 ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக  83 சதவீதம் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டப் பணிகளை வரும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற உந்து சக்தியாக இருந்தவர் நாராயணசாமி நாயுடு - அமைச்சர் பெருமிதம்!

அதில் தற்போது,  பூந்தமல்லி-பவர் ஹவுஸ் இடையிலான வழித்தடத்தை 3 ஆண்டுகளுக்குள் முடித்து, ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதுபோல, சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னையில் இதுவரை 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 83% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.