8 ஆயிரம் வாடகைக்கு வீடு - தடைசெய்யப்பட்ட 1100 கிலோ புகையிலை பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் காரமடை போலீசார் நடவடிக்கை.

8 ஆயிரம் வாடகைக்கு வீடு -  தடைசெய்யப்பட்ட 1100 கிலோ புகையிலை பறிமுதல்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயர் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் காரமடை காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராகிம் பயிற்சி உதவி ஆய்வாளர் தியாகராஜூ, தனிப்பிரிவு தலைமை காவலர் விவின் மற்றும் போலீசார் காரமடை மேட்டுப்பாளையம் ரோடு குட்டையூர் பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வழியே வந்த மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்த சேக் தாவூத் மகன் காஜா மைதீன் (49) ஒட்டி வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 135 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது இதை அடுத்து அவரை காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | குற்றச்செயலை குறைக்க ட்ரோன் கேமரா பறக்கவிட்டு சோதனை

விசாரணையில் காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் 8000 ரூபாய்க்கு வீடு வாடகைக்கு எடுத்து வீட்டில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்து விற்பனைக்காக 950 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை அடுத்து காஜாமைதீனை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கார் இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் தடை செய்யப்பட்ட 1100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர் நீதிபதி குற்றவாளியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் இதை அடுத்து காஜா மைதீன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்